குடிநீர் விநியோகம் மற்றும் குறைபாடுகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் சின்னவேடம்பட்டி, துடியலூர் பகுதிகளில் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ராஜ கோபால் சுன்கரா இன்று 15.09.2021 ஆய்வு மேற்கொண்டார்.

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் துடியலூர் முதல் சரவணம்பட்டி செல்லும் சாலையில் அமைந்துள்ள தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தால் பராமரிக்கப்பட்டுவரும் நீருந்து நிலையத்தில் கோவை மாநகராட்சிக்குட்பட்ட சின்னவேடம்பட்டி, வெள்ளக்கிணறு ஆகிய பகுதிகளுக்கு செல்லும் குடிநீர் விநியோகம் மற்றும் குறைபாடுகள், மாநகராட்சிக்கு பெறப்படும் குடிநீர் அளவு குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர், துடியலூரில் அமைந்துள்ள மாநகராட்சி வணிக வளாகத்தில் ஆய்வு மேற்கொண்டு அருகாமையில் அமைந்துள்ள மாநகராட்சி கழிப்பிடம் தூய்மையாக பராமரிக்கப்படுகிறதா என மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின்போது, மாநகரப் பொறியாளர் லட்சுமணன், செயற்பொறியாளர் ஞானவேல், உதவி ஆணையாளர் அண்ணாதுரை, உதவி செயற்பொறியார் செந்தில்பாஸ்கர் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்