ரூ.20 லட்சம் செலவிலான அங்கன்வாடி எம்.எல்.ஏ திறந்து வைத்தார்

கோவை வடக்கு சட்டமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கட்டப்பட்ட அங்கன்வாடி மையத்தை அதிமுக சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் அம்மன் அர்ஜுனன் இன்று துவக்கி வைத்தார்

கோவை சாயிபாபா காலனி பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் அப்பகுதியில் அங்கன்வாடி மையம் அமைக்க வேண்டும் என்று வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்ஜூனனிடம் கோரிக்கை வைத்திருந்தனர்.

அதன்படி, சாய்பாபா காலனி பகுதியில் சட்டமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.20 லட்சம் மதிப்பில் அங்கன்வாடி மையம் அமைக்கும் பணி நடைபெற்றது.

பணிகள் அனைத்தும் முடிந்த நிலையில், மக்கள் பயன்பாட்டிற்காக அந்த அங்கன்வாடி மையத்தை வடக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் அம்மன் அர்ஜுனன் இன்று திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் சாயிபாபா காலனி பகுதி அதிமுக செயலாளர் காலனி கருப்பையா, வார்டு செயலாளர் இளங்கோ,இளைஞர் இளம்பெண்கள் பாசறை மாவட்ட செயலாளர் ராஜேஷ் ஆகியோர் கலந்துகொண்டனர்