ஒரே நாளில் 115 பெண்களுக்கு மார்பக புற்றுநோய் பரிசோதனை செய்த கே.எம்.சி.ஹெச்

பொதுவாக எல்லா புற்றுநோய்களையும் எந்த அறிகுறியும் இல்லாமல், தொடக்க நிலையில் கண்டுபிடிக்க முடியாது. ஆனால் அறிகுறி இல்லாமலிருந்தாலும் கூட மார்பக புற்றுநோயை பரிசோதனை மூலம் கண்டுபிடித்து விடலாம்.

கோவை மெடிக்கல் சென்டர் மருத்துவமனை சமீபத்தில் உலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான ‘ஹோலோஜிக்’ அதிநவீன 3D மேமோகிராபி கருவியை பெற்றுள்ளது. இந்த கருவியில் எடுக்கப்படும் படம், மிகவும் துல்லியமாக இருப்பதோடு, 4 நொடிகளில் உயர்தர 3D படமாக கிடைக்கும். உலகிலேயே இது தான் துல்லிய தரமிக்க படம் தரும் இயந்திரம் ஆகும்.

கே.எம்.சி.ஹெச் மருத்துவமனையின் தலைவர் டாக்டர் நல்ல ஜி. பழனிசாமி கோவை மாநகர பெண் காவலர்களுக்கு இலவச மார்பக புற்றுநோய் பரிசோதனை செய்ய மருத்துவமனை மருத்துவர்களுக்கு அறிவுறுத்தினார். அதனை தொடர்ந்து கே.எம்.சி.ஹெச் மருத்துவமனையின் கதிரியக்கவியல் துறை தலைவர் டாக்டர் மாத்யூ செரியன் மற்றும் மார்பக சிகிச்சை மையத்தின் நிபுணர் டாக்டர் ரூபா ஆகியோர் கோவை மாநகர காவல் ஆணையாளர் தீபக் தமோர் மற்றும் மாநகர குற்றப்பிரிவு துணை கண்காணிப்பாளர் உமா ஆகியோரை சந்தித்து பெண் காவலர்களுக்கு இலவசமாக மார்பக புற்றுநோய் பரிசோதனை செய்யவுள்ளோம் என்று கூறினார்கள். அதற்கு காவல் ஆணையாளர் மற்றும் குற்றப்பிரிவு துணை ஆணையாளர் சம்மதித்தனர்.

அதனை தொடர்ந்து மார்பக சிகிச்சை மையத்தின் நிபுணர் டாக்டர் ரூபா முதலில் மார்பக புற்றுநோய் பற்றிய விழிப்புணர் எற்படுத்தும் விதத்தில் கோவை மாநகர காவல் ஆணையாளர் கூட்ட அரங்கிலும் மற்றும் போலீஸ் பயிற்சி பள்ளி கூட்ட அரங்கிலும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர். இதில் 200-க்கும் அதிகமான பெண் காவலர்கள் கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து (05.09.2021) அன்று இலவச 3D மேமோக்ராம் பரிசோதனை கே.எம்.சி.ஹெச் மார்பக சிகிச்சை மையத்தில் நடத்தது. இதில் 115 பெண் காவலர்கள் கலந்து கொண்டு பரிசோதனைகளை மேற்கொண்டனர். இந்தியாவிலேயே ஒரே நாளில் 115 பெண்களுக்கு 3D மேமோக்ராம் மார்பக பரிசோதனை செய்வது இதுவே முதன்முறையாகும்.

கோவை மெடிக்கல் சென்டர் மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் மருத்துவர் அருண் பழனிசாமி, காவல் துறையில் உள்ள பெண்களுக்கு இலவசமாக பரிசோதனை செய்து உதவியுள்ளதை மகிழ்ச்சியுடன் வரவேற்றுள்ளார். “நம்மை காக்கும் காவலர்களை நாம் பாதுகாப்பது நம் கடமை” என தெரிவித்துள்ளார்.

கதிரியக்கவியல் துறை தலைவர் டாக்டர் மாத்யூ செரியன், ” கோவை மெடிக்கல் சென்டரில் மார்பக மருத்துவ மையம் உருவாக்குவது நமது மருத்துவமனை தலைவரின் கனவு. அது இந்தியாவிலேயே சிறந்த மார்பக மருத்துவ சிகிச்சை மையமாக உருவாகியுள்ளது,” என பாராட்டியுள்ளார்.