‘ஸ்டார்ட் அப் கோவை’ நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்த அமைச்சர்

ஸ்டார்ட்அப் இன்குபேஷன் மையம், ஏ.ஐ.சி ரைய்ஸ் (AIC RAISE), கோவையின் அனைத்து ஸ்டார்ட்-அப் ஈகோ சிஸ்டம்களையும் ஒருங்கிணைக்கும் வகையில், ரைய்ஸ் அப் கோவை (“RAISEUP COVAI”) எனும் விழாவினை ஏற்பாடு செய்தது. இவ்விழா தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் மற்றும் மாவட்ட ஆட்சியர் சமீரன் முன்னிலையில் தொடங்கப்பட்டது.

தகவல் தொழில்நுட்பத் துறையை மேம்படுத்துவது குறித்த பல்வேறு தலைப்புகளில் பிரத்யேகமான கலந்துரையாடல் அமைச்சர், மாவட்ட ஆட்சியர், ஸ்டார்ட்அப் மற்றும் இன்குபேட்டருக்கு இடையே நடைபெற்றது.

இதைத் தொடர்ந்து அமைச்சர், ஐடி நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் கோயம்புத்தூர் தொழில் முனைவோர் இடையே (Gap between Coimbatore Startup Ecosystem and being Silicon Valley of India) என்ற தலைப்பில் கலந்துரையாடல் நடைபெற்றது.

குழு விவாதத்தைத் தொடர்ந்து, தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் “ஸ்டார்ட் அப் கோவை” நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார். மேலும் சிறப்பான புதிய பாடத்திட்டத்தை உள்ளடக்கிய, (MBA in Innovation, Entrepreneurship & Venture Development) எனும் கோர்ஸ்ஐயும் தொடக்கி வைத்தார்.

அமைச்சரின் முன்னிலையில், மாணவர் தொழில்முனைவோரை உருவாக்கும் IEDC திட்டத்தினை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் ஸ்ரீ சக்தி பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி, இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, மற்றும் நிர்மலா மகளிர் கல்லூரி போன்ற கல்லூரிகள் பங்கு பெற்றிருந்தன.

மேலும் (Raiseup Fellowship Program) அமைச்சரால் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டது. பல்வேறு கட்ட ஆய்விற்கு பிறகு அதில் தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்களுக்கு 18 மாதங்களுக்கு தலா மாதம் வீதம் ரூ. 25000/ வழங்கப்படும். அதனுடன், அவர்களது புதிய தொழில் சார்ந்த திட்டங்கள் சாத்தியமான மாதிரியாகக் கண்டறியப்பட்டால், அதனை மேம்படுத்தும் விதமாக ரூ. 5 லட்சம் வழங்கப்படும்.