கோவையில் நடைபெற்ற மெகா தடுப்பூசி முகாம்

கோவையில் 1.5 லட்சம் தடுப்பூசிகளுடன் மெகா தடுப்பூசி முகாம் (12.09.2021) நடைபெற்றது. இந்த முகாமில் கோவை மாநகராட்சி சார்பில் 305 சிறப்பு முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டது. 263 நிரந்த முகாம்கள், 25 நடமாடும் முகாம்கள், ரயில் மற்றும் பேருந்து நிலையங்களில் 7, வ.உ.சி மைதானத்தில் 10 முகாம் என ஏற்பாடு செய்யப்பட்டன. காலை 7 முதல் மாலை 7 மணி வரை இந்த முகாம்கள் செயல்படும். இந்த முகாமில் கோவிஷில்ட் மற்றும் கோவேக்சின் ஆகிய இரு தடுப்பூசிகளும் முதல் மற்றும் இரண்டாம் தவணை இரண்டும் போடப்பட்டது.

மேலும் முகாம்களுக்கு செல்ல இயலாத முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு அவர்கள் இருப்பிடத்திற்கே சென்று தடுப்பூசி செலுத்த நடமாடும் முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டன. இது தொடர்பாக கோவை மாநகராட்சி சார்பில் செயல்படும் கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்கள் (0422-2302323, 9750554321) தெரிவிக்கப்பட்டது.

இரண்டாம் தவணை செலுத்த வரும் அனைவரும் முதல் தவணை செலுத்தியதற்கான சான்று வைத்திருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது. அனைத்து மையங்களிலும் பாதுகாப்பிற்காக போலீசார் ஈடுப்பட்டனர்.