நாளை தடுப்பூசி முகாம்: கோவை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு

கோவையில் நாளை மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுதை முன்னிட்டு கோவை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் சங்கர் கோவையில் ஆய்வு (11.09.2021) மேற்கொண்டார்.

கோவை மாவட்டம் முழுவதும் நாளை 1.5 லட்சம் தடுப்பூசிகளுடன் மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.
1474 மையங்களில் இந்த தடுப்பூசி முகாம் நடைபெறுவதை முன்னிட்டு அனைத்து ஏற்பாடுகளும் துரித கதியில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக, கோவை ராமநாதபுரம் அரசு பள்ளியிலும் வ.உ.சி மைதானத்தில் அமைக்கப்பட்டும் தடுப்பு முகாமிலும் கோவை மாவட்ட கண்காணிப்பாளர் சங்கர் நேரில் ஆய்வு செய்தார். அப்போது தடுப்பூசி மையங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய வழிமுறைகள் குறித்து மாவட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்.

இந்த ஆய்வின்போது மாவட்ட ஆட்சியர் சமீரன், மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுன்கரா மாநகர சுகாதார அலுவலர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.

இந்த ஆய்வுக்குப் பின் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்று வரும் ஆலோசனைக் கூட்டத்தில் கோவை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் சங்கர் கலந்து கொண்டுள்ளார்.