வருமான வரி தாக்கல் செய்ய கால அவகாசம் நீட்டிப்பு

இந்திய வருமான வரி சட்டத்தின்படி, 60 வயதுக்கு குறைவாக உள்ள தனிநபரின் ஆண்டு வருமானம் 2.50 லட்சம் அல்லது அதற்கு மேல் இருந்தால் அவர்கள் வருமான வரி கணக்கை தாக்கல் செய்வது அவசியம். அது போல 60 – 80 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு ஆண்டு வருமானம் 5 லட்சத்திற்கு மேல் இருந்தால், அவர்களும் வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய வேண்டும். ஆண்டுதோறும் ஜூலை 31ம் தேதிக்குள் முந்தைய ஆண்டுக்கான வருமான வரியை தாக்கல் செய்ய வேண்டும் என்பது விதி.

ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் உள்ளிட்ட காரணங்களால் வருமான வரியை தாக்கல் செய்வதற்கு அவகாசம் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 2020 – 2021ம் ஆண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கு செப்டம்பர் 10 ம் தேதி வரை அவகாசம் கொடுக்கப்பட்டு இருந்த நிலையில், இன்னும் முழுமையாக வருமான வரி தாக்கல் நிறைவடையாத நிலையில் தற்போது மீண்டும் கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி 2020- 2021ம் ஆண்டுக்கான வருமான வரி கணக்கை டிசம்பர் 31 தேதி வரை தாக்கல் செய்யலாம் என கூறப்பட்டுள்ளது.