கதிர் கல்லூரியில் ” நாட்டு நலப்பணி திட்டத்தின் பங்கு” – கருத்தரங்கம்

கோவை கதிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் செயல்பட்டு வரும் நாட்டு நலப்பணி திட்டத்தின் சார்பாக “தேச கட்டுமானத்தில் நாட்டு நலப்பணி திட்டத்தின் பங்கு” என்ற தலைப்பிலான கருத்தரங்கு காணொளி வாயிலாக (04.09.2021) நடைபெற்றது.

இவ்விழாவில் கதிர் கல்விக்குழுமத் தலைவர் கதிர், கல்லூரியின் செயலாளர் லாவண்யாகதிர் தலைமையேற்றனர். அதன் தொடர்ச்சியாக கல்லூரியின் முதல்வர் கற்பகம் முன்னிலை வகித்து சிறப்பித்தார்.

இந்நிகழ்ச்சியில் ராமசுப்ரமணியன் (District GLT Coordinator 2020 – 2021) லயன்ஸ் கிளப் ஆப் கோவை, குறிஞ்சி (Lions Club of Cbe Kurinji- Dist. 324 B1) பங்கேற்று சிறப்புரையாற்றினார்.

இவ்விழாவில் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட மாணவ உறுப்பினர்கள், கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் கலந்துகொண்டனர்.