மாடல் யுஎன் மாநாடு: சிறந்த பிரதிநிதி விருதை வென்ற நேஷனல் மாடல் பள்ளி மாணவி

மாடல் யுஎன் நிறுவனம் நடத்திய மாடல் யுனைடெட் நேஷன்ஸ் மாநாட்டில் “சிறந்த பிரதிநிதி விருதை” நேஷனல் மாடல் பள்ளி மாணவி கனிஷ்கா ஸ்ரீ வென்றுள்ளார்.

ஆன்லைன் மூலம் நடத்தப்பட்ட இந்த மாநாட்டில் நேஷனல் மாடல் பள்ளி மாணவர்கள் 22 பேர் உட்பட நாடு முழுவதிலும் இருந்து 7 பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 130 மாணவர்களும் பாகிஸ்தானைச் சேர்ந்த 2 மாணவர்களும் பங்கேற்றனர்.

மாநாடு அனுபவம் குறித்து மாணவி கனிஷ்கா ஸ்ரீ கூறுகையில்: சர்வதேச போட்டியில் இது எனது முதல் நுழைவு ஆகும். “சிறந்த பிரதிநிதி விருதை” வென்றதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். நான் எம்யூஎன் மாநாட்டின் உலக சுகாதார அமைப்பு குழுவில் சீனாவைப் பிரதிநிதித்துவப்படுத்தினேன். இந்த போட்டிக்காக நான் நிறைய ஆராய்ச்சி செய்தேன். இந்த மாநாட்டில் எனது பள்ளியை நான் பிரதிநிதித்துவப்படுத்தியதில் மகிழ்ச்சியடைகிறேன் என்றார்.

இது குறித்து நேஷனல் மாடல் பள்ளியின் முதல்வர் டாக்டர் கீதா லட்சுமண் கூறுகையில்: முக்கிய மொழியாக உள்ள ஆங்கிலத்தில் எங்கள் மாணவர்கள் சிறந்த தகவல் தொடர்பு திறன்களைப் பெற நாங்கள் தேவையான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். ‘‘தினமும் குறுகிய பேச்சு நிகழ்ச்சி’’ என்பது ஒவ்வொரு வகுப்பு செயல்பாட்டின் ஒரு பகுதியாக உள்ளது.

இடைநிலைப் பள்ளிகளுக்கான மாடல் யுனைடெட் நேஷன்ஸ் மாநாட்டில் எங்கள் மாணவர்களை பங்கேற்கச் செய்ய விரும்பினோம். இந்த மாநாட்டில் எங்கள் மாணவர்கள் பங்கேற்பது இதுவே முதல் முறை ஆகும்.

130 பங்கேற்பாளர்களிடையே எங்கள் குழு இரண்டாம் இடத்தைப் பிடித்ததில் மகிழ்ச்சியடைகிறோம். இந்த மாடல் யுனைடெட் நேஷன்ஸ் மாநாடுகள் மாணவர்களின் நம்பிக்கை மற்றும் ராஜதந்திரம் மற்றும் ஒருவருக்கொருவர் திறன்களை அதிகரித்தல், அவர்களின் ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு திறன்களை வளர்க்க ஒரு சிறந்த தளத்தை வழங்குகிறது என்று தெரிவித்தார்.