கே.எம்.சி.எச் சார்பில் 1000 பொதுமக்களுக்கு இலவச தடுப்பூசி!

தமிழகத்தில் அரசு சார்பில் கொரோனா வைரஸுக்கான தடுப்பூசி இலவசமாக போடப்பட்டு வருகிறது. இந்நிலையில் தனியார் மருத்துவமனைகளில் சி.எஸ்.ஆர் நிதியைக் கொண்டு இலவச தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை அண்மையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்தார்.

இதனைத்தொடர்ந்து, கோவை கே.எம்.சி.ஹெச் மருத்துவமனை சார்பாக சி.எஸ்.ஆர் நிதியைக் கொண்டு இலவச கொரோனா தடுப்பூசி திட்டத்தின் கீழ், கோவை மாவட்ட பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் திருப்பூர் மாவட்டம் அவினாசியில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியிலும், தெக்கலூரில் உள்ள ஊராட்சி ஒன்றியத்துவக்கப் பள்ளியிலும் 1000 பொதுமக்களுக்கு இலவச கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.

இந்த முகாமிற்கு சிறப்பு அழைப்பாளராக திருப்பூர் மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் ஜகதீஷ்குமார் கலந்து கொண்டு தொடக்கி வைத்தார். இவருடன் கே.எம்.சி.ஹெச் மருத்துவமனை வணிக பிரிவின் துணைத் தலைவர் நாராயணன் உடனிருந்தார்.