இந்துஸ்தான் கல்லூரி சார்பில் ஆன்-லைன் மினி மாரத்தான்

இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி சார்பாக தேசிய விளையாட்டு தினத்தை கொண்டாடும் வகையில் ஆன்-லைன் மினி மாரத்தான் போட்டி வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று நடத்தப்பட உள்ளது.

இப்போட்டியானது காலை 6 மணி முதல் 8 மணி வரை நடைபெற உள்ளது. போட்டியில் பெண்களுக்கு 2 மற்றும் 3 கி.மீ மற்றும் ஆண்களுக்கு 5, 8 மற்றும் 10 கி. மீ தூரமும் நடத்தப்படும்.

போட்டியில் தங்களது பெயர்களை பதிவு செய்து கொண்டவர்கள் போட்டி அன்று 5 கல்லூரிக்கு வர தேவை இல்லை. அதற்கு பதில் போட்டியாளர்கள் தங்களது இருப்பிடத்திற்கு அருகிலோ அல்லது விருப்பப்பட்ட இடத்திலிருந்து தாங்கள் தேர்வு செய்த கி. மீட்டர் படி அவர்களுடைய செல்போனில் ரன்னிங் ட்ராக் செயலி மூலம் போட்டியாளர்கள் ஓடி முடித்தவுடன் ஸ்கிரீன் ஷாட் எடுத்து போட்டி ஒருங்கிணைப்பாளர்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

போட்டியாளர்கள் ஓடி முடித்த விவரத்தினை தணிக்கை செய்து குறிப்பிட்ட கிலோ மீட்டர் தூரத்தை குறைந்த நிமிடங்களில் எந்த போட்டியாளர் நிறைவு செய்தாரோ அவர் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டு முதல் 10 வெற்றியாளர்களுக்கும், பங்கேற்பாளர்களுக்கும் மின் சான்றிதழ் மின்னஞ்சலில் அனுப்பி வைக்கப்படும்.

இப்போட்டியின் நிறைவு விழா ஆன்லைனில் நடத்தப்பட்டு வெற்றியாளர்கள் அறிவிக்கப்படும், விழாவின் சிறப்பு விருந்தினராக கோவை மாவட்ட DSO ரவிச்சந்திரன் கலந்து கொள்கிறார்.

தொடர்புக்கு: 9944977885, 9597957619, 9865119924