ஜூனியர் உலகக்கோப்பை வாலிபால்: எஸ்.டி.சி கல்லூரி மாணவர் தேர்வு

19 வயதிற்குட்பட்ட ஜூனியர் உலகக்கோப்பை வாலிபால் போட்டியில் பொள்ளாச்சி ஸ்ரீ சரஸ்வதி தியாகராஜா கல்லூரி மாணவர் தேர்வு செய்ப்பட்டுள்ளார்.

இந்த போட்டியில் இந்தியா உள்ளிட்ட 20 நாடுகள் கலந்து கொள்கின்றன. 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ள இப்போட்டியில் இந்தியா, நைஜீரியா, போலாந்து, குவாத்தமாலா மற்றும் போட்டியை நடத்தும் ஈரான் உள்ளிட்ட அணிகள் A பிரிவில் இடம் பெற்றுள்ளன. ஆகஸ்ட் 24ம் தேதி முதல் செப்டம்பர் 2 ம் தேதி வரை இப்போட்டிகள் நடைபெறுகின்றது.

இப்போட்டியில் கலந்து கொள்ளும் இந்திய அணியின் தேர்வு ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் அமைந்துள்ள கே.எல். பல்கலைக்கழகத்தில் ஜூலை 22 மற்றும் 23ம் தேதிகளில் நடைபெற்றது. அதில் 20 பேர் கொண்ட அணியானது தேர்வு செய்யப்பட்டு ஆகஸ்ட் 20ம் தேதி 12 பேர் கொண்ட இந்திய ஜூனியர் அணி அறிவிக்கப்பட்டது.

மேற்கண்ட இந்திய அணியின் தேர்வில் பொள்ளாச்சி ஸ்ரீ சரஸ்வதி தியாகராஜா கல்லூரி முதலாமாண்டு மாணவர் வேனு தேர்வு செய்யப்பட்டார். மாணவர் வேனு ஓசூரை சேர்ந்தவர்.

2018 ல் பஞ்சாபில் நடைபெற்ற ஜூனியர் வாலிபால் போட்டியில் தமிழகத்தின் சார்பில் பங்கேற்று மூன்றாம் இடத்தையும், 2020 ல் ஆந்திராவில் நடைபெற்ற ஜூனியர் வாலிபால் போட்டியில் தமிழகத்தின் சார்பில் பங்கேற்று இரண்டாமிடத்தையும் கைப்பற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

மாணவரை கல்லூரியின் தலைவர் விஜயமோகன், துணைத்தலைவர் சேதுபதி, செயலர் வெங்கடேஷ், முதல்வர் சோமு, முதன்மை இயக்குனர் நந்தகோபால், உடற்கல்வி இயக்குனர் பாரதி, பயிற்சியாளர் சந்திரசேகரன் நாயர், விளையாட்டுத்துறையின் ஆலோசனைக்குழு உறுப்பினர் செல்லமுத்து, இணை இயக்குனர்கள் ரேவதி மற்றும் சதாம் உசேன் ஆகியோர் பாராட்டினர்.