அறிவுசார் சான்றோர் அறக்கட்டளை சார்பில் மதிய உணவு

சூலூர் அறிவுசார் சான்றோர் கல்வி அறக்கட்டளை சார்பில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்
லட்சுமணன் Ex.MLC அவர்களின் 102வது பிறந்தநாளை முன்னிட்டு அவரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டு பொதுமக்களுக்கு இனிப்பு (20.08.2021) வழங்கப்பட்டது.

மேலும் சூலூர் சிறப்புநிலை பேரூராட்சியில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் அலுவலர்கள் அனைவருக்கும் மதிய உணவு தலைவர் குமாரவேல், செயலாளர் உதயகுமார், பொருளாளர் செந்தில்குமார் ஆகியோரால் வழங்கப்பட்டது.

திமுக நகர பொறுப்பாளர் சோலை கணேஷ், பேரூராட்சி இளநிலை உதவியாளர் சாமிநாதன், பேரூராட்சி அலுவலக உதவியாளர் ஆனந்தகுமார் நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

 

SOURCE: பத்திரிக்கை செய்தி