அளவுக்கு மீறினால் சிக்கன்-னும் நஞ்சு!

‘அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு’ இந்த பழமொழி அனைவரும் அறிந்த ஒன்றே. என்னதான் ஆரோக்கியமான உணவு என்றாலும் தினசரி சாப்பிட்டால் அதுவும் நஞ்சுதான். பெரும்பலான அசைவப் பிரியர்களின் முதல் தேர்வு சிக்கன் தான். அதற்காகவே சிறு கடைகளில் தொடங்கி ஸ்டார் ஓட்டல் வரை அனைவரும் சிக்கனிற்கு முன்னுரிமை கொடுக்கிறார்கள். அப்படி தினமும் சிக்கன் சாப்பிடும் சிக்கன் பிரியர்கள் அதன் பக்கவிளைவுகளையும் பற்றி அவசியம் தெரிந்துகொள்ளவேண்டும்.

சூட்டை கிளப்பும் : சிக்கன் உடலில் அதிக சூட்டை கிளப்பும் உணவாக கருதப்படுகிறது. எனவே தொடர்ச்சியாக சாப்பிடுவது உங்கள் உடலின் ஒட்டுமொத்த வெப்பநிலையை அதிகரிக்கலாம். குறிப்பாக கோடை காலத்தில் சிக்கன் அதிக ஹீட்டை உண்டாக்கும். அப்படி உடல் சூட்டை வெளியிடுவதாக உணர்ந்தால் சில நாட்கள் சிக்கனை முற்றிலும் தவிர்த்தல் நல்லது.

கொழுப்பு உணவு : சரியான முறையில் சிக்கனை உட்கொண்டால் கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்காது. எனவே அதை நீங்கள் எப்படி உட்கொள்கிறீர்கள் என்பதைப் பொறுத்தே நன்மை தீமை இருக்கிறது. நீங்கள் வறுத்த சிக்கனை வழக்கமாக சாப்பிடுபவர் என்றால், உங்கள் கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்கும் என்பதில் சந்தேகமில்லை. உண்மையில், அமெரிக்கன் ஜர்னல் ஆஃப் கிளினிக்கல் நியூட்ரிஷனில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், வெள்ளை இறைச்சி சிவப்பு இறைச்சியைப் போலவே கெட்ட கொழுப்பின் அளவை அதிகரிக்கிறது. உங்கள் கொழுப்பின் அளவை கட்டுக்குள் வைத்திருக்க, வேகவைத்த, சுடப்பட்ட அல்லது கிரில் செய்யப்பட்ட சிக்கனை உட்கொள்வது சிறந்தது.

எடையை அதிகரிக்கும் : சிக்கனை தொடர்ந்து சாப்பிடுவதன் மற்றொரு பக்க விளைவு எடை அதிகரிப்பு. சிக்கன் பிரியாணி, பட்டர் சிக்கன், ஃப்ரைட் சிக்கன் மற்றும் பல சுவைகளில் அதை சாப்பிட்டாலும் எடையை அதிகரிக்கும். எனவே உடல் எடையில் அக்கறை செலுத்துபவர் எனில் சிக்கனை எப்போதாவது எடுத்துக்கொள்வது நல்லது. ஆனால் வழக்கமாக சாப்பிடுவது நிச்சயமாக எடை அதிகரிப்புக்கு வழிவகுக்கும் மற்றும் கொலஸ்ட்ரால் அதிகரிக்கும்.

சிக்கனின் சில வகை கோழிகள் சிறுநீர் பாதை நோய்த்தொற்று அல்லது UTI தொற்றை உண்டாக்கலாம். அமெரிக்கன் சொசைட்டி ஃபார் மைக்ரோபயாலஜியின் ஜர்னல் எம்பியோவில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின்படி, ஈ.கோலின் பாக்டீரியா சிக்கனில் அதிகமாக இருக்கும். அவ்வாறு சாப்பிடும் சிக்கன் ஈ.கோலினால் அதிகம் பரவியிருந்தால் அது சிறுநீர் பாதை தொற்று, UTI தொற்றை உண்டாக்கலாம்.