பசிப்பிணி போக்கும் நிகழ்வின் துவக்க விழா

காவேரி குரூப் கம்பெனி மற்றும் கோவை ஜூபிடர் லயன்ஸ் சங்கம் சார்பில் பசிப்பிணி போக்கும் நிகழ்ச்சி உக்கடம் லட்சுமி நரசிம்மர் கோயில் அருகில் திங்கட்கிழமையன்று நடைபெற்றது.

இதில் பொதுமக்கள் மற்றும் சாலையோரம் மக்கள் சுமார் 200க்கும் மேற்பட்டோருக்கு உணவுகள் வழங்கப்பட்டது. இதனை கோவை மாவட்டம் 324 டி மாவட்ட ஆளுநர் கே குப்புசாமி தலைமை தாங்கி பசிப்பிணி போக்கும் நிகழ்வினை துவக்கி வைத்தார்.

இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், பன்னாட்டு அரிமா சங்கங்கள் 324 டி சார்பில் பல்வேறு சேவைகள் கோவை மாவட்டத்தில் செய்து வருகின்றனர். இதன் முக்கிய நிகழ்வாக பசிப்பிணி போக்கும் நிகழ்வு துவங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து 15 நாட்கள் பசிப்பிணி போக்கும் திட்டத்திற்கு உணவுகளை காவேரி குரூப் ஆப் கம்பெனி மற்றும் ஜூபிடர் லயன்ஸ் கிளப் இரண்டாம் துணைத் தலைவர் அரிமா வினோத் சிங் ரத்தோர் வழங்கி வருகிறார்.

முன்னதாக, ஸ்மார்ட் சிட்டி ரேஸ்கோர்ஸ், நைட்டிங்கேல் அரிமா சங்கங்கள் இணைந்து கண் நீரிழிவு நோய் குழந்தைகளுக்கான புற்றுநோய் விழிப்புணர்வு பிரசாரம் வழங்குதல், கபசுர குடிநீர் வழங்குதல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு மற்றும் பசிப்பிணி போக்கும் நிகழ்வுகள் நடத்தியது.

தொடர்ந்து சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் நீர் சேமிப்பு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடைபேரணியாக உக்கடம் காவல் நிலையம் வரை சென்று காவல் ஆய்வாளர்களிடம் மரக்கன்றுகளை வழங்கினார்.

நிகழ்ச்சியில் பசிப்பிணி போக்குதல் திட்டத்தின் மாவட்ட தலைவர் அரிமா திருமலைசாமி, மண்டலத் தலைவர் அரிமா ராஜேஷ், வட்டார தலைவர் அரிமா உதயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.