62 கமலிசம் : நெட்டிசன்கள் பரப்பும் வைரல் புகைப்படம்!

நடிகர் கமல் ஹாசன் தனது திரைத்துறை வாழ்க்கையில் மொத்தம் 62 ஆண்டுகள் கடந்து இருக்கிறார். இந்த 62 ஆண்டுகளை நினைவூட்டும் வகையில் பல சிறப்புகள் கொண்ட ஒரு புகைப்படம் சமூக வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதில் கமலின் 62 ஆண்டு திரையுலகில் அவரது நடிப்பில் உச்சம் தொட்ட திரைப்படங்களினுடைய குறியீடுகள் அந்த புகைப்படத்தில் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ளது.

இதில் ஒளிந்துள்ள அந்த குறியீடுகளை நெட்டிசன்கள் கண்டுபிடித்து அதனை சமுக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார்கள். எடுத்துக்காட்டாக சத்திய  படத்தை குறிப்பிடும் வகையில் காப்பும், ஆளவந்தான் படத்தை குறிப்பிடும் வகையில் முக கண்ணாடியும் வைக்கப்பட்டுள்ளது.

இது போன்று உங்களால் கண்டுபிடிக்க முடியும் குறியீடுகள் என்னவென்று கூறுங்கள்…