நாளை விண்ணில் பாய்கிறது ஜி.எஸ்.எல்.வி. எப்- 10

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் நாளை (12.08.2021) அதிகாலை ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஜி.எஸ்.எல்.வி. எப்- 10 ராக்கெட் விண்ணில் பாய்வதாக தெரிவித்துள்ளது.

இயற்கை பேரழிவுகள், விவசாயம், வனவியல், கனிமவியல், பேரிடர் எச்சரிக்கை போன்றவற்றை அறிந்து கொள்வதற்காக ஈ.ஒ.எஸ். -03 என்ற செயற்கோளை இஸ்ரோ வடிவமைத்துள்ளது. இந்த செயற்கைகோள் 2,268 கிலோ எடை கொண்டது. இந்த செயற்கைகோள் ஜி.எஸ்.எல்.வி. எப்-10 ராக்கெட்டில் பொருத்தப்பட்டு ஆகஸ்ட் 12 அதிகாலை 5.43 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது. இதையடுத்து விண்ணில் செலுத்துவதற்கான கவுண்டவுன் இன்று காலை 03.43 மணிக்கு துவங்கியது.

கொரோனா பரவல் காரணமாக தொடர்ச்சியாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் திட்டமிட்டபடி ராக்கெட்டுகளை இஸ்ரோவால் விண்ணில் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டது. மேலும், இது புவி ஒத்திசைவுக்கு ஏற்ப செயற்கைக்கோளை சுமந்து செல்லும் 14 வது ராக்கெட் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த ராக்கெட்டில், விண்ணில் செலுத்தப்பட இருக்கும் பூமி கண்காணிப்பு செயற்கைகோள் அதிநவீன சுறுசுறுப்பான பூமி கண்காணிப்பு செயற்கைகோளாகும். இது பூமியின் மேல்பரப்பில் இருந்து 36 ஆயிரம் கிலோமீட்டர் தூரத்தில் நிலை நிறுத்தப்பட உள்ளது.