வி நிறுவனம் அறிவித்த புது சலுகை

வி நிறுவனம் ரூ. 449 விலையில் பிரீபெயிட் சலுகையை அறிவித்து இருக்கிறது. இந்த சலுகையில் வழக்கமான பலன்களுடன் ஜீ5 சந்தா வழங்கப்படுகிறது. இத்துடன் தினமும் 4 ஜிபி டேட்டா, அனைத்து நெட்வொர்க்குகளுக்கும் வரம்பற்ற அழைப்புகள் வழங்கப்படுகிறது.

புதிய வி ரூ.449 சலுகை 56 நாட்கள் வேலிடிட்டி கொண்டுள்ளது. இந்த சலுகையில் வாராந்திர டேட்டா ரோல் ஓவர் வசதி, வி மூவிஸ் மற்றும் டி.வி. செயலிக்கான சந்தா, இரவு நேரத்தில் வரம்பற்ற டேட்டா (நள்ளிரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை) உள்ளிட்ட பலன்களும் வழங்கப்படுகிறது.

இத்துடன் தினமும் 100 எஸ்.எம்.எஸ். வழங்கப்படுகிறது. வி ரூ.449 சலுகை நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் வழங்கப்படுகிறது. இதனை வாடிக்கையாளர்கள் வி வலைதளத்தில் ரீசார்ஜ் செய்து கொள்ளலாம்.