ஓடிடியில் வெளியாகிறதா கேஜிஎஃப் 2 ?

கடந்த 2018-ம் ஆண்டு வெளியான கேஜிஎஃப் முதல் பாகம் வெற்றி பெற்றதால், கேஜிஎஃப் 2 இரண்டாம் பாகத்தை எடுத்துள்ளார் இயக்குநர் பிரஷாந்த் நீல். ஸ்ரீநிதி ஷெட்டி, சஞ்சய் தத், பிரகாஷ் ராஜ், ரவீனா டாண்டன் உள்ளிட்டோர் நடித்துள்ள கேஜிஎஃப் 2 டீசர் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. கடந்த ஜூலை மாதம் 16ம் தேதி கேஜிஎஃப் 2 உலகம் முழுக்க வெளியாகும் என்று ஏற்கெனவே அறிவித்திருந்தது படக்குழு.

ஆனால், கொரோனா இரண்டாவது அலை தாக்கத்தால் கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, மகாராஷ்ட்ரா என பல மாநிலங்களில் தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளதால், கேஜிஎஃப் 2 புதிய வெளியீட்டு தேதி விரைவில் தெரிவிக்கப்படும் என்று இயக்குநர் பிரஷாந்த் அறிவித்திருந்தார்.

இந்த நிலையில், முன்னணி ஓடிடி தளம் கேஜிஎஃப் – 2 படத்தை 250 கோடிக்கு நேரடியாக வெளியிட கேட்டுள்ளது. இதற்கு, நடிகர் யஷும் தயாரிப்பு நிறுவனமும் எவ்வளவு காலம் எடுத்துக்கொண்டாலும் பரவாயில்லை. தியேட்டரில் மட்டுமே கேஜிஎஃப் 2 படத்தை ரசிகர்கள் ரசிக்கவேண்டும் என்று ஓடிடி தளத்துக்கு உறுதியாக மறுப்பு தெரிவித்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.