குப்புசாமி நாயுடு நினைவு மருத்துவமனை சார்பில் இலவச தடுப்பூசி முகாம்

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை மற்றும் கோ.குப்புசாமி நாயுடு நினைவு மருத்துவமனை இணைந்து நடத்தும் இலவச தடுப்பூசி முகாம் வீரபாண்டி பகுதியில் அமைந்துள்ள குப்புசாமி நாயுடு நினைவு கிராமிய மருத்துவமனையில் சனிக்கிழமை (07.08.2021) நடைபெற்றது.

இதில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கவிதா மற்றும் கிராமப்புற சுகாதார சேவையின் இணை இயக்குனர் டாக்டர் சந்திரா ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, இந்த முகாமை துவக்கி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து, இந்த மருத்துவமனையின் முதன்மை செயல் அதிகாரி டாக்டர் ரகுபதி வேலுசாமி கூறியதாவது,

கொரோனா பெருந்தொற்று உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. கொரோனாவிற்கு எதிரான ஒரே ஆயுதமாக தடுப்பூசி மட்டுமே உள்ளது. இதில் இருந்து நம்மை காத்து கொள்ள அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.

மேலும், குப்புசாமி நாயுடு மருத்துவமனை சார்பில் கிராமப்புற மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் வகையில் இந்த இலவச தடுப்பூசி முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும், இன்றிலிருந்து அடுத்த நான்கு நாட்களுக்கு இந்த பகுதியில் உள்ள 1000 பேருக்கு தடுப்பூசி செலுத்த திட்டம் கொண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.