வாட்ஸ் அப்பில் மறையும் புகைப்படங்கள்!

கடந்த சில மாதங்களாக வாட்ஸ்அப் பல்வேறு புதிய அப்டேட்களை வழங்கி வருகின்றது. அதில், மிகவும் முக்கியமான அம்சம், மறையும் புகைப்படங்கள். வியூ ஒன்ஸ் என்று கூறப்படும் இந்த அம்சம், இன்ஸ்டாகிராமில் இருக்கும் அம்சத்தைப் போன்றது. இந்த அம்சம் தற்போது வாட்ஸ்ஆப்பின் அனைத்து யூசர்களுக்கும் கிடைக்கிறது.

வியூ ஒன்ஸ் என்ற அம்சத்தைப் பயன்படுத்தி வாட்ஸ்அப்பில் புகைப்படம் அனுப்பும்போது, அதை, ரிசீவர் பார்த்துவிட்டு, சாட்டை விட்டு வெளியேறினால், அந்த புகைப்படம் மறைந்துவிடும். ஆனால், நீங்கள் வியூ ஒன்ஸ் என்ற தேர்வை ஒவ்வொரு முறை புகைப்படம் அல்லது வீடியோ அனுப்பும் போதும் தேர்வு செய்யவேண்டும். அதை பெறுபவரின் கேலரியில் அல்லது ஃபோனில் அந்த புகைப்படமோ அல்லது வீடியோவோ சேமிக்கப்படாது. ஒரு முறை அதைப் பார்த்து விட்டால், வாட்ஸ்அப் அதனை மறுமுறை காட்டாது.