நெட் ப்ளிக்ஸில் நாளை வெளியாகும் ‘நவரசா’

கொரோனா தொற்று பொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்ட திரைப்பட ஊழியர்களுக்கு உதவும் விதமாக இயக்குநர் மணிரத்னம், ஜெயேந்திர பஞ்சாபகேசன் ஆகியோர் நவரசா திரைப்படத்தை இணைந்து தயாரித்துள்ளனர்

கோபம், சிரிப்பு, வெறுப்பு, அழுகை, ஏமாற்றம் உள்ளிட்ட 9 ரசங்களை வெளிப்படுத்தும் விதமாக இயக்கப்பட்டுள்ள நவரசா திரைப்படம் நெட்-ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாவதாக அறிவிப்பு வந்தது.

இந்நிலையில் முன்னணி நடிகர்களான சூர்யா, விஜய் சேதுபதி, பார்வதி, ஐஸ்வர்யா ராஜேஷ், யோகிபாபு, சித்தார்த் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்தத் திரைப்படம் நாளை நெட் ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது ரசிகர்களிடையே ஆவலை ஏற்படுத்தியுள்ளது.