தனுஷ் 44ன் நடிகர்கள் பட்டியல் வந்தாச்சு!

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஜவகர் மித்ரன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிக்கும் அவரது 44வது திரைப்படத்துக்கான நடிகர்கள் பெயரைத் தற்போது சன்பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டு வருகிறது. இன்னும் டைட்டில் முடிவு செய்யப்படாத இந்தப் படத்தில் தனுஷுடன் பாரதிராஜா, பிரகாஷ் ராஜ், நித்யா மேனன், ராஷி கண்ணா, ப்ரியா பவானி சங்கர் ஆகியோர் இணைந்துள்ளனர். படப்பிடிப்பு ஆகஸ்ட் 6-ஆம் தேதி தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த 2016ம் ஆண்டு ‘துருவங்கள் பதினாறு’ திரைப்படம் மூலமாக அறிமுகமாகி சூப்பர் ஹிட் கொடுத்த இளம் இயக்குநர் கார்த்திக் நரேன். இவருடன் தனுஷ் இணைவதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு சற்று கூடுதலாகவே உள்ளது.