தடுப்பூசிக்கு பின்பு எந்த உணவுகளை தவிர்க்க வேண்டும்?

நாம் அனைவரும் இயல்பாகவே உணவை விரும்பி சாப்பிடும் உணவு பிரியர்களே. அதிலும் நமக்கு பிடித்தமான உணவாக இருந்தால் அதனால் ஏற்படும் பக்க விளைவுகளையும்  நாம் பெரிதாக  கண்டுகொள்வது கிடையாது. இது மனிதனின் இயற்கையான ஒரு குணம் என்றே சொல்லலாம். ஆனால் இந்த தன்மை சில நேரத்தில் சிக்கலை ஏற்படுத்தக் கூடியதாக மாறலாம்.  சில வகை உணவினால் அலர்ஜி ஏற்படும் தன்மை உள்ளவர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட பின் அவர்கள் சாப்பிடும் உணவில் கவனம் கொள்வது மிக அவசியமான ஒன்றாக உள்ளது. குறிப்பாக எந்த மாதிரியான உணவினை தவிர்க்கவேண்டும் என்பது குறித்து அறிந்திருக்க வேண்டும்.

இதுகுறித்து ஏ.ஜி.எஸ் ஹெல்த் கேர் இயக்குனர் மருத்துவர் ஆதித்யன் குகன் – னிடம் கேட்டபோது:

பொதுவாகவே தடுப்பூசிகளில் நிறைய வகைகள் உண்டு. தடுப்பூசியை செலுத்திக் கொண்ட பின்னர்  சர்க்கரை அதிகம் உள்ள உணவுகளை தவிர்க்க வேண்டும் என்று மருத்துவர்கள் சொல்வதுண்டு. ஒரு சிலர் அவர்களுக்கு  ஏற்கனவே இருக்கும் அலர்ஜி பற்றி தெரிந்து  வைத்திருப்பார்கள். ஒருவேளை தனக்கு அலர்ஜி உள்ளது என்பதே தெரியாமலோ அல்லது இதற்கு முன் அலர்ஜியின் தன்மை குறைவாக இருந்து வரும் நபர்களுக்கு தடுப்பூசி செலுத்திக் கொண்ட பின் எடுக்கும் உணவினால் அலர்ஜி ஏற்படலாம்.  அவ்வாறு அலர்ஜி வரும்போது கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டதன் விளைவாகவே தனக்கு அலர்ஜி ஏற்பட்டுள்ளது என்ற சில தவறான புரிதல்கள் ஏற்படுவதுண்டு.

இவ்வாறு ஏற்படாமல் இருக்க உடலில் அலர்ஜி தன்மை கொண்டவர்கள் தோல் பரிசோதனையில் இம்யூனோ குளோபுலின் – இ, சி- ரீயாக்ட்டிவ் ப்ரோட்டீன் (CRP)  என்ற இந்த இரண்டு பரிசோதனை செய்து கொள்வதின் மூலம் அலர்ஜி தன்மையின் அளவை கண்டறியலாம்.

அதோடு, தடுப்பூசி செலுத்திக்கொண்ட  பிறகு பொதுவாக ஒருவாரத்திற்கு அசைவ உணவுகளை தவிர்ப்பது நல்லது.

 

தவிர்க்கப்பட வேண்டிய உணவுகள்:

கத்திரிக்காய்

சீஸ்

காளான்

அசைவ உணவுகள் (கடல் உணவுகள்  உட்பட)

சர்க்கரை சேர்க்கப்பட்ட உணவுகள்

நிறம் கூடிய உணவுகள்

நிலக்கடலை

கிழங்கு வகைகள்

குளிர்பானங்கள்

ஐஸ்கிரீம்