கே.ஜி மருத்துவமனையில் நவீன கார்டியாக் ஆப்ரேசன் தியேட்டர்கள் துவக்கம்

கே.ஜி மருத்துவமனையில் இருதய அறுவை சிகிச்சை துறையில் 2 நவீன கார்டியாக் ஆப்ரேசன் தியேட்டர்கள் இன்று (3.8.2021) துவக்கப்பட்டது.

இருதய அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் முரளீதரன் இந்த 2 இருதய அறுவை சிகிச்சை மையத்தை திறந்து வைத்தார். இந்த அறுவை சிகிச்சை துறையில் 4 இருதய சிகிச்சை நிபுணர்களும், 4 இருதய அறுவை சிகிச்சை நிபுணர்கள் உள்ளனர். அதேபோல் சிறந்த மயக்கவியல் நிபுணர்கள் மற்றும் செவிலியர்கள் என இந்த நவீன இருதய அறுவை சிகிச்சை துறை துவக்கப்பட்டுள்ளது. மாஸ்டர் ஹெல்த் செக்கப் மற்றும் ஹார்ட் செக்கப் செய்து கொள்ளலாம்.

இந்நிகழ்ச்சியில் கே.ஜி மருத்துவமனை சார்பில் டாக்டர் பக்தவத்சலம், டாக்டர் அசோக் பக்தவத்சலம், வசந்தி ரகு, அவந்திகா ஆகியோர் கலந்து கொண்டனர்.