வெல்னெஸ் பிரத்யேக உடற்பயிற்சி மையம் துவக்க விழா

கோவை சாய்பாபாகாலனி, அழகேசன் சாலையில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான வெல்னெஸ் எனும் பிரத்யேக உடற்பயிற்சி மையம் துவங்கப்பட்டது.

கடந்த பதினெட்டு ஆண்டுகளாக பிரபல பிசியோதெரபிஸ்டாக இருந்து வரும் கலைவாணி கோவை சாய்பாபாகாலனி பகுதி அழகேசன் சாலையில் கோ ஆப்டெக்ஸ் அருகில் வெல்னெஸ் உடற்பயிற்சி மையத்தை கடந்த பத்து ஆண்டுகளாக நடத்தி வருகின்றார்.

இந்நிலையில் மாறி வரும் சூழ்நிலைக்கேற்ப பல்வேறு நவீன வகை உடற்பயிற்சி உபகரணங்களுடன் புதுப்பிக்கப்பட்ட வெல்னெஸ் உடற்பயிற்சி ஸ்டுடியோ துவக்க விழா நடைபெற்றது. கலைவாணி, ரவி, மற்றும் பங்குதாரர் உடற்பயிற்சி ஆலோசகர் கவுதம் கென்னடி ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இதற்கான துவக்க விழாவில் வெல்னெஸ் உடற்பயிற்சி மைய குழுவினர் இணைந்து திறந்து வைத்தனர்.

இந்த நவீன உடற்பயிற்சி மையத்தில், ஆண்கள் மற்றும் பெண்கள் உடற்பயிற்சி செய்வதற்கான நவீன வகை உபகரணங்கள், எடை குறைப்பு கருவிகள், மற்றும் விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்ளும் வகையில் பிரத்யேக பயிற்சி முறைகள், உலகத்தரம் வாய்ந்த பிசியோதெரபி கருவிகள் என அனைத்தும் ஒரே இடத்தில் அமையபெற்ற மையமாக வெல்னெஸ் ஸ்டுடியோ அமைந்துள்ளது.

இது குறித்து இதன் வெல்னெஸ் ஸ்டுடியோ நிறுவனரான கலைவாணி கூறுகையில், தற்போதைய சூழலில் உடற்பயிற்சி முக்கிய தேவையாக இருப்பதால் இந்த மையத்தை துவக்கி உள்ளதாகவும், குறிப்பாக இங்கு பிசியோதெரபி பயிற்சிகள் சிறந்த முறையில் தேர்ந்த பயிற்சியாளர்களை கொண்டு வழங்க இருப்பதாக கூறினார். மேலும் ஆண்கள் மற்றும் பெண்கள் அனைவரும் இங்கு பயிற்சி செய்யும் வகையில் இருந்தாலும், பெண்களுக்கென தனியாக காலை முதல் மதியம் வரை நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

குறிப்பாக விளையாட்டு துறையில் சாதிக்க விரும்புவர்களுக்கு சிறப்பு சலுகைகளும் இந்த பயிற்சி மையத்தில் வழங்க உள்ளதாகவும் பங்குதாரர் கவுதம் கென்னடி தெரிவித்துள்ளார்.