கொரோனா நடவடிக்கையில் ஆளுங்கட்சி இன்னும் அதிகமாக செய்யலாம்

-மநீம தலைவர் கமலஹாசன்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த கமல்ஹாசன் நேர்மையாக எங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி எனவும் அவர்களுக்கும் ஜனநாயகத்திற்கும் வணக்கம் தெரிவிக்க கோவை வந்துள்ளேன் எனவும் கூறினார். கோவையில் மக்கள் நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டது மக்களை எண்ணித்தான் எனவும், மக்களின் நலன் பார்த்தே ஆளுங்கட்சி செயல்பட்டு வரும் நிலையில் அழுத்தம் எதுவும் கொடுக்கவில்லை என்றும் தெரிவித்தார்.

கொங்குநாடு அரசியல் கோஷம் மட்டுமே, மக்கள் தேவை இல்லை என கூறிய அவர் கோவை மக்களுக்கு திட்டங்களில் பிரிவினை பார்க்கப்படுவதாகவும்,  உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் பங்கு மட்டுமே இருக்க வேண்டும் எனவும் கூறினார். மேலும் ஈஸ்ட் இண்டியன் கம்பனி போல, வடக்கில் வடக்கிந்திய கம்பனி தயாராகி வருவதாகவும், மேகதாது விஷயத்தில் பாஜக இரட்டை வேடம் போடுகிறது என்றார்.

கொரோனா நடவடிக்கையில் ஆளுங்கட்சி முடிந்ததை செய்கிறது, இன்னும் அதிகமாக செய்யலாம் என்றார். தொடர்ந்து பேசிய அவர் தோல்வியை சினிமாவிலும் கற்றிறுக்கிறேன் என்றும், கோவை மக்கள் எங்களுக்கு நம்பிக்கையை அளித்துள்ளார்கள் என்றார்கள் என்றும் தெரிவித்தார். இழந்த அரசியல் மாம்பை மீட்டெடுப்பது எங்கள் பணி எனவும்,  தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதிகளை ஏமாற்றுவது தமிழகத்தில் உள்ள கட்சிகளுக்கு புதிதல்ல எனவும் கூறினார்.