இரத்தினம் கல்வி குழுமம் இரு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்

இரத்தினம் கல்லூரியில் கோவையைச் சேர்ந்த மாலிக்குலார் கனக்ஸன்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம், கோவையைச் சேர்ந்த உயிரியல் மற்றும் நானோ தொழில்நுட்பம் ஆராய்ச்சிக் கூடம் இவற்றோடு இரத்தினம் கல்வி குழுமமும் இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தம் (03.08.2021) செய்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் மாலிக்குலார் கனக்ஸன்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் நிறுவனரும், முதன்மை நிர்வாக இயக்குனருமான ஜிக்னேஷ் பாட்டே, உயிரியல் மற்றும் நானோதொழில்நுட்பம் ஆராய்ச்சிக் கூடத்தின் இயக்குநர் ரகுநாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.

இரத்தினம் கல்வி குழுமங்களின் தலைவர் மதன்.ஆ.செந்தில் தலைமை தாங்கினார். இரத்தினம் தொழில்நுட்ப வளாகத்தின் முதன்மை நிர்வாகி நித்தியானந்தம், இரத்தினம் தொழில்நுட்ப வளாகத்தின் முதல்வர் நாகராஜ், இரத்தினம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதன்மை நிர்வாக அதிகாரி மாணிக்கம், இரத்தினம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் முரளிதரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு விருந்தினர் ஜிக்னேஷ் பாட்டே பேசுகையில், நவீன காலத்திற்கு ஏற்ப மாணவர்கள் தங்கள் கற்றல் திறனை வளர்த்து கொள்ள வேண்டும் என்றும், புதிய கண்டுபிடிப்புகள் மூலமே நம் சமூகம் வளர்ச்சி அடையும் என்றும் பேசினார்.

மற்றொரு சிறப்பு விருந்தினர் ரகுநாதன் பேசுகையில் மாணவர்கள் தங்களை சுற்றியுள்ள பிரச்சனைகளுக்கு தேர்வு காண்பதன் மூலம் ஒரு தொழில் முனைவோரக மாற முடியும் என்றும், நானோ தொழில்நுட்பம் மூலம் நம்முடைய அனைத்து தேவைகளையும் பூர்த்திசெய்து கொள்ள முடியும் பேசினார்.

பின்னர் இந்த இரு நிறுவனங்களோடு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. மேலும் இரத்தினம் தொழில்நுட்ப வளாகத்தில் புதிதாக துவங்கப்பட்ட உயிரி தொழில்நுட்பவியல் மையத்தை மாலிக்குலார் கனக்ஸன்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் நிறுவனரும், முதன்மை நிர்வாக இயக்குனருமான ஜிக்னேஷ் பாட்டே திறந்து வைத்தார்.