பார்வையற்றோருக்கு நிவாரண பொருட்கள் வழங்கிய நா.கார்த்திக்

கோவை வரதராஜபுரம் பகுதியில் உள்ள பார்வையற்றோர் தேசிய இணையம் சார்பாக நூற்றுக்கும் மேற்பட்ட பார்வையற்றோருக்கு நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி (01.08.2021) நடைபெற்றது

சிங்காநல்லூர் திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், மாநகர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளருமான நா. கார்த்திக் 200க்கும் மேற்பட்ட பார்வையற்ற மக்களுக்கு அரிசி, பருப்பு, சர்க்கரை உள்ளிட்ட 14 வகையான நிவாரண பொருட்களை வழங்கினார்.

மேலும், அவர்களுக்கு மதிய உணவும் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் பார்வையற்றோர் தேசிய இணையம் நிர்வாகிகள், சிங்கை பொறுப்பாளர் சிவா, சிங்கை பொறுப்புக் குழு உறுப்பினர் திராவிட மணி, வார்டு பொறுப்பாளர்கள் ஜெயராமன், மாணிக்கவாசகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.