சங்கரா கல்லூரியில் “பூமி மாதா” தினம்

பூமியின் வளங்களை வளர்ப்பதற்கும், பாதுகாப்பதற்கும், பூமிக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவும் சங்கரா அறிவியல் மற்றும் வணிகக் கல்லூரியில் பூமி மாதா தினம் (31.07.2021) கொண்டாடப்பட்டது.

கல்லூரியின் இணைச் செயலாளர் டி. ஆர். கல்யாணராமன் பூமியைப் பற்றி உரையாடினார். இந்த நாளில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு ஓவியம் வரைதல், கட்டுரை எழுதுதல், புகைப்படம் எடுத்தல், ஸ்லோகம் எழுதுதல் மற்றும் சொற்பொழிவு, ஆகிய போட்டிகள், தாய் பூமியை காப்பாற்றுங்கள், நமது சுற்றுச்சூழலை காப்பாற்றுங்கள், சுற்றுச்சூழலில் கோவிட் 19 இன் தாக்கம், பசுமை மற்றும் தூய்மை, உலகம், மற்றும் நமது கிரகத்தை காப்பாற்றுங்கள் ஆகிய தலைப்பில் ஏற்பாடு செய்யப்பட்டது. பல மாணவர்கள் போட்டிகளில் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியில் கல்லூரி வளாகத்திற்குள் நிர்வாகம் மற்றும் ஆசிரியர்களால் மரக்கன்றுகள் நடப்பட்டன.

நமது தாய் பூமியைக் காப்பாற்றுவதற்கான முக்கியத்துவத்தை மேம்படுத்துவதற்காக சூழல் அறிவோம் குழுமத்தைச் சேர்ந்த தீபக் வெங்கடாசலம் “பூமியும் நானும்” என்ற தலைப்பில் காணொளி கருத்தரங்கம் நடத்தப்பட்டது. அவர் நமது தாய் பூமியின் தற்போதைய மற்றும் எதிர்கால நிலைமைகள் பற்றி விளக்கினார்.

சுற்றுச்சூழல் பற்றிய புத்தகங்களைப் படிக்கவும், சுற்றுச்சூழலைக் காக்கும் நடவடிக்கைகளில் பங்கேற்கவும் அறிவுறுத்தினார். நமது அன்றாட நடவடிக்கைகளில் நீர் பயன்பாட்டின் முக்கியத்துவத்தை விளக்கி, அனைத்து அம்சங்களிலும் தண்ணீரை சேமிக்க அறிவுறுத்தினார்.