டி.எம்.ஐ நிறுவனத்துடன் இரத்தினம் கல்வி குழுமம் புரிந்துணர்வு ஒப்பந்தம்

இரத்தினம் கல்வி குழுமமும் பெங்களூரைச் சேர்ந்த டி.எம்.ஐ நிறுவனமும், இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தம் (23.07.2021) செய்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் டி.எம்.ஐ நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இரத்தினம் தொழில்நுட்ப வளாகத்தின் முதன்மை நிர்வாக அதிகாரி நித்தியானந்தம், இரத்தினம் தொழில்நுட்ப வளாகத்தின் முதல்வர் நாகராஜ், இரத்தினம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதன்மை நிர்வாக அதிகாரி மாணிக்கம், இரத்தினம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் முரளிதரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு விருந்தினர் பேசுகையில், உயிரி தொழில்நுட்ப துறை ஒரு சில கல்லூரிகளிலே தான் உள்ளது. எனவே மாணவர்களுக்கு சிறப்பான எதிர்காலம் உள்ளது. எனவே மாணவர்கள் மின்னணுவியலின் அடிப்படை கருத்துக்களை புரிந்து பயில வேண்டும். இந்த வாய்ப்பை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கூறினார்.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் மாணவர்கள் படிக்கும் போதே நிறுவனத்தில் பயிற்சி பெற முடியும். இந்த நிறுவனத்தின் பொறியாளர்கள் மாணவர்களுக்கு நிறுவனங்களுக்கு தேவையான பயிற்சியை கல்லூரிக்கு வந்தும், நிறுவனத்திலும் பயிற்சி அளிப்பார்கள். மேலும் ஆசிரியர்கள் தங்களது கண்டுபிடிப்புகளையும் புதிய ஆராய்ச்சிக் கட்டுரைகளையும் இந்த நிறுவனத்துடன் இணைந்து வெளியிடலாம். மாணவர்களுக்கு வேலை வாய்ப்புகளையும் இந்த நிறுவனம் வழங்கும்.