வேளாண்மை பல்கலைக்கழகத்தில் புத்தக கண்காட்சி

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கலகத்தில் ஆண்டுதோறும் புத்தக கண்காட்சி நடைபெற்று வருகிறது. அதே போல், இந்த ஆண்டும் புத்தக கண்காட்சி (20.02.2018 மற்றும் 21.02.18) நடைபெற்று வருகிறது. துவக்க நாளான இன்று (20.02.18) தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கலகத்தின் பதிவாளர் டாக்டர் சுதாகர் கண்காட்சியை துவக்கி வைத்தார். வேளாண்மை மற்றும் இணைந்த அறிவியல் அடங்கிய சுமார் 22,000 க்கும் மேற்பட்ட புத்தகங்கள் இக்கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன. 20% தள்ளுபடியுடன் நடைபெறும் இப்புத்தக கண்காட்சியில் சுமார் 1000க்கும் மேற்பட்டோர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இக்கண்காட்சியில், ஆக்ஸ்போர்டு புத்தக கம்பெனி டெல்லி, எம்.எஸ்.எம் புக்ஸ் கோவை, சாந்தி புக்ஸ் சென்னை, பிரசாத் புக் ஏஜென்சி பெங்களூர், மீனா எண்டர்பிரைசஸ் மதுரை உள்ளிட்ட 22 புத்தக ஸ்டால்கள் இடம் பெற்றுள்ளன.

கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பலர் இக்கண்காட்சியில் கலந்து கொண்டனர். கோவை வேளாண்மை பல்கலைக்கழக சிறப்பு அதிகாரி டாக்டர் எஸ்.மோகன் மற்றும் துணை நூலகர் டாக்டர் பிரேமா ஆகியோர் இப்புத்தக கண்காட்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.