ஆர்.ஆர்.ஆர் படத்தின் வைரலான மேக்கிங் வீடியோ

பாகுபலி வெற்றிக்கு பிறகு இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் தற்போது உருவாகி வரும் படம் இரத்தம் ரணம் ரெளத்திரம் (ஆர்.ஆர்.ஆர்).

தெலுங்கு நடிகர்கள் ராம்சரண் தேஜா மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கும் இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் தயாராகிறது. டி.வி.வி தனய்யா தயாரிக்கும் இப்படத்திற்கு கீரவாணி இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது.

இந்நிலையில், ஆர்.ஆர்.ஆர் படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. ரசிகர்களை பிரம்மிப்பூட்டும் வகையில் அமைந்துள்ள இந்த மேக்கிங் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.