மஹிந்திராவின் புதிய பி.எஸ்.ஐ.வி கட்டுமான உபகரண வரம்பு அறிமுகம்

மஹிந்திரா குழுமத்தின் ஒரு பகுதியான மஹிந்திரா அண்டு மஹிந்திரா லிமிடெட் தனது பி.எஸ்.ஐ.வி-க்குட்பட்ட கட்டுமான சாதனங்களான புதிய பி.எஸ்.ஐ.வி உடனான மோட்டார் கிரேடர் – மஹிந்திரா ரோட்மாஸ்டர் ஜி 9075 அண்டு ஜி 9595 அண்டு பேக்ஹோ லோடர் – மஹிந்திரா எர்த்மாஸ்டர் எஸ்எக்ஸ், விஎக்ஸ் ஆகியவற்றை அதன் வணிக கட்டுமான உபகரணங்களின் கீழ் அறிமுகப்படுத்தியுள்ளது.

இதுகுறித்துப் பேசிய மஹிந்திரா ட்ரக் அண்டு பஸ் மற்றும் கட்டுமான உபகரணங்களின் வணிகத் தலைவர் ஜலாஜ் குப்தா, கட்டுமான உபகரணங்கள் வணிகத்திற்கான எங்கள் பிராண்ட் நோக்கமானது, வாடிக்கையாளர்களுக்கு நம்பகத்தன்மை மிக்க தரமான சேவையை வழங்குவதாகும். அதற்காக, இப்போது எங்கள் பி.எஸ்.ஐ.வி வரம்பில் மஹிந்திராவை அறிமுகப்படுத்துகிறோம். சவால்களை எப்போதும் எதிர்கொள்ளும் நாங்கள், வாடிக்கையாளர்களுக்கு சிறந்த நம்பகத்தன்மை மற்றும் குறைந்த செலவு மற்றும் இயக்க செலவுகளை வழங்கும் சிறந்த தரமான தீர்வுகளை வழங்குவதே நோக்கமாகக் கொண்டுள்ளோம். இதன் மூலம் அவர்களின் உற்பத்தித்திறன் மற்றும் லாபம் மேம்படுகிறது. வாடிக்கையாளர்களின் மகிழ்வே எங்கள் நோக்கம் என்றார்.

கட்டுமான உபகரணத் தொழிலுக்கு புதிய வரம்பு விதிமுறைகள் வருவதால், பிஎஸ்ஐவி இணக்கமான மஹிந்திரா ரோட்மாஸ்டர் மோட்டார் கிரேடர்களை தொடங்குவதில் மகிழ்ச்சியடைகிறோம். மஹிந்திராவின் தயாரிப்பு மேம்பாட்டு செயல்முறையின் தனிச்சிறப்பு என்பது நுகர்வோரின் தேவைகளைப் பற்றிய ஆழமான புரிதலுக்குப் பிறகு தயாரிப்புகளை வழங்குவதாகும் என்றார்.