அலுமினிய பெட்டியில் இவ்வளவு ஆபத்தா?

சில ஆண்டுகளுக்கு முன்னர் எந்த உணவகத்திற்கு சென்றாலும், நிகழ்ச்சிக்கு சென்றாலும் வாழை இலையில் உணவு பரிமாறுவார்கள். காரணம் வாழை இலையில் உணவு சாப்பிடுவதால் செரிமானம் செய்ய உதவுவதோடு, வயிறு புண்களையும் ஆற்றும். அக்காலத்தில் நம் முன்னோர்கள் தினமும் வாழை இலையில் சாப்பிட்டதால் உடலில் எவ்விதமான நோய்களுமின்றி நீண்டகாலம் வாழ்ந்தனர்.

தற்போது அதை மாற்றி பேப்பர் இலையில் உணவு பரிமாறும் நிலைக்கு நாம் தள்ளப்பட்டிருக்கிறோம். மேலும் தற்போது உள்ள ஹோட்டல்களில் ஒரு சில உணவகங்களில் இலையில் சாப்பாடு பரிமாறுகிறார்கள். அது தவிர சிலர் பார்சல் வாங்கி செல்லும் உணவு பதார்த்தங்களை சுடச்சுட அலுமினியத்தால் ஆன பெட்டியில் போட்டு தருகின்றனர். இது மிகவும் ஆபத்தான ஒன்று.

இதில் உள்ள மெல்லிய பல்வகை உலோகம் நம் உணவோடு கலந்து ஆஸ்துமா போன்ற பிரச்சனைகளை உருவாக்குகிறது. இதில் வைக்கப்பட்டுள்ள உணவுகளை உட்கொள்ளும் போது நமக்கு சுவாசிப்பதில் சிரமத்தை ஏற்படுத்துகிறது. அலுமினியத் தட்டில் உள்ள ரசாயனம் நமது எலும்புகளை பலவீனப்படுத்தும். நரம்பு மண்டலத்தை சேதப்படுத்தும்.

இதில் உணவு உட்கொண்டால் புற்றுநோய் உண்டாகும் அபாயம் கூட உள்ளது. அலுமினிய தகடில் சூடான உணவுகளை வைத்து பார்சல் செய்யும் போது அதிலுள்ள கூறுகள் உருகி உணவில் படுவதால் கல்லீரல் மற்றும் சிறுநீரக செயலிழப்புக்குக் வழிவகுக்கிறது.

 

Source: Seithi solai