கொரோனா நெறிமுறைகளை பின்பற்றி திருமணம் : ஆட்சியர் வாழ்த்து

கோவை மாவட்டம் பூலுவபட்டி இலங்கை தமிழர்கள் முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் சமீரன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அம்முகாமில் நடைபெற்ற திருமண விழாவில் குறைந்த எண்ணிக்கையிலான பங்கேற்பாளர்களுடன் எளிய முறையில் அரசு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி திருமணம் செய்து கொண்ட மாணிக்கவாசகன், ஸ்ரீசாஜீகா தம்பதியினரை வாழத்தி பொன்னாடை வழங்கினார்.

இந்நிழ்ச்சியின் போது வருவாய் கோட்டாட்சியர் (கோவை தெற்கு) திரு.செந்தில் அரசன், வட்டாட்சியர் திரு.ரமேஷ், வட்டார வளர்ச்சி அலுவலர் திரு.ஜெயக்குமார், செயல் அலுவலர்கள் திருமதி.புவனேஷ்வாஜீ, திரு.பெலிக்ஸ் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனா;.

தொடர்ந்து பூலுவப்பட்டி மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையித்தில் ஆய்வு மேற்கொண்ட ஆட்சித்தலைவர் கொரோனா சிறப்பு சிகிச்சை பிரிவு, பொது சுகாதாரப்பிரிவு உள்ளிட்டவைகளில் ஆய்வு மேற்கொண்டதுடன், தடுப்பூசி வழங்கும் பணி தொடர்பாகவும் வட்டார மருத்துவ அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.