சமூக ஊடகங்கள் மூலம் பொருட்களுக்கு விளம்பரம் செய்வது எப்படி? – கருத்தரங்கம்

கே.பி.ஆர் கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரியின் வணிகவியல் துறை சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் எனும் தலைப்பில் இணையவழி கருத்தரங்கம் நடைபெற்றது.

நிகழ்விற்கு கல்லூரி முதல்வர் பாலுசாமி தலைமையுரை வழங்கினார். சிறப்பு விருந்தினராக சந்தோஷ்குமார் (Coimbatore Accent Techno Soft, Social Media Analyst) கலந்து கொண்டு தமது உரையில் ஊடகங்கள் வாயிலாக சந்தைப்படுத்தல் தொடர்பான செய்திகளை மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்.

இன்றைய சமூக ஊடகங்கள் மூலம் பொருட்களுக்கு விளம்பரம் செய்வது எப்படி? என்பது பற்றியும், துணை சந்தைப்படுத்தல் தொடர்பான வலைப்பதிவு (Blog), தேடு பொறி மேம்படுத்தப்படுத்தல் (Search Engine Optimization- SEO) என்பது பற்றியும் விளக்கினார். மேலும், சமூக ஊடகங்களான முகநூல், இன்ஸ்டாகிராம், யூடியூப் பற்றிய கூகுள் தகவல்களையும் தமது உரையில் கூறினார்.

கூகுள் தரவரிசைகளை மேம்படுத்த ஒவ்வொரு மாதமும் எவ்வளவு நேரம் முதலீடு செய்ய வேண்டும்? என்பது பற்றிய செய்திகளை விளக்கிக் கூறினார். மேலும் மாணவர்களின் வினாக்களுக்கு விடை பகிர்ந்தார். இந்நிகழ்வில் துறை சார் புல முதன்மையர்கள் பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் என 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
.