ஐடியா ஆய்வகம் அமைக்க ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி தேர்வு

அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கழகம் ( AICTE ) ஐடியா ஆய்வகத்தை, அமைப்பதற்காக வட்டமலைபாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி தேர்வு தேர்வு செய்யப்பட்டுள்ளது.

அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கழகம் இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் ஐடியா ஆய்வகத்தை நாடு முழுவதும் உள்ள, எ.ஐ.சி.டி.இ- யால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களில், கல்லூரியின் நிறுவன மேம்பாட்டு கவுன்சில் மூலம் அமைக்கும் திட்டத்தைக் கொண்டு வந்தது. புதுமையான யோசனைகள் அவற்றின் உருவாக்கம், மதிப்பீடுகள் மற்றும் செயல்பாடு ஆகியவற்றின் மூலம் மாணவர்களை ஆராய்ச்சியில் ஈடுபட செய்வதே இந்த ஆய்வகத்தின் முக்கிய நோக்கமாகும்.

இந்தத் திட்டத்தின் கீழ், நாடு முழுவதிலும் இருந்து தகுதி நிறைந்த 204 கல்லூரிகள் விண்ணப்பங்களை சமர்ப்பித்திருந்தன. இந்த விண்ணப்பங்களை தேசிய வழிநடத்தல் குழு மதிப்பீடு செய்து இறுதியாக 49 கல்லூரிகள் தேர்வு செய்யப்பட்டன. .

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி, இந்த ஐடியா ஆய்வகத்தை தனது வளாகத்தில் அமைப்பதற்கான நிதி உதவியைப் பெறுவதற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆய்வகத்திற்கு தொழில்நுட்ப ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் உதவுவதற்கு கோவையை சேர்ந்த கிராப்ட்மேன் ஆட்டோமேஷன் என்னும் முன்னணி தொழில்துறை நிறுவனம் முன்வந்துள்ளது.

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி மாணவர்கள் மட்டுமல்லாது அருகாமையில் உள்ள கல்லூரியின் மாணவர்களும் இந்த ஆய்வகத்தை பயன்படுத்தும் வகையில் 24மணி நேரமும் ஆய்வகம் திறந்திருக்கும்.