மறுவரையறை கூட்டம்

போத்தனூர், சரித்திரம் வீதி மாநகராட்சி அலுவலகத்தில், பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சி நிர்வாகிகளிடம் மாநகராட்சி வார்டு மறுவரையறை உத்தேச பட்டியல் குறித்த கருத்துக்கள் மற்றும் ஆட்சேபனைகளை மாநகராட்சி ஆணையாளர் மரு.க.விஜயகார்த்திகேயன் கேட்டறிந்தார். இக்கூட்டத்தில், துணை ஆணையாளர் ப.காந்திமதி, தெற்கு மண்டல உதவி ஆணையாளர் ரவி, செயற்பொறியாளர் திட்டங்கள் ரவிச்சந்திரன், மாமன்ற செயலாளர் ஆ.அமல்ராஜ், மாகராட்சி அலுவலர்கள், பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.