கொரோனா பாதித்தோரை தாக்கும் கருப்பு பூஞ்சை தொற்று

கொரோனா பலரது வாழ்வை அளிக்கிறது. இதில் கொரோனவால் பாதிக்கப்பட்ட பலருக்கும்  மியூகோர்மைக்கோசிஸ் எனும் கருப்பு பூஞ்சைத் தொற்று அதிகளவில் தாக்கியுள்ளதாக தெரிவிக்கின்றனர். இத்தொற்றால் கண் பார்வையை இழக்கும் சூழல் ஏற்படுவதோடு, நுரையீரலையும் பாதிக்கும் என்று டெல்லி எய்ம்ஸ் இயக்குனர் ரந்தீப் குலேரியா தெரிவித்துள்ளார்.

உலக நாடுகளால் பலரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுகின்றனர். அதில் சிலர் இறந்தும் விடுகின்றனர். இந்த நிலையிலிருந்து எப்பொழுது மீள்வோம் என்ற அச்சத்துடன் நாட்களை கடந்து வரும் நமக்கு தொற்றால் பாதிக்கப்படுவோருக்கு கருப்பு பூஞ்சைத் தொற்று அதிகப்படியானோரை தாக்குகிறது. இதனால் கண் பார்வை இழக்கும் அபாயம் ஏற்படும் நிலை ஏற்படும் என்றும் மேலும் இது நுரையீரலை பாதிக்கும் என்றும் டெல்லி எய்ம்ஸ் இயக்குனர் தெரிவித்திருப்பது மேலும் அச்சத்தை ஏற்படுத்துகிறது.