14 மணி நேரம் இரட்டைச் சிலம்பம் சுற்றி சோழன் உலக சாதனை

கோவை கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரி தமிழர் தற்காப்புக் கலை மன்றம் சார்பில் தமிழரின் மரபுக் கலைகள் மீதான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கிலும் அனைவரும் வாக்கு செலுத்துவதன் அவசியத்தையும் வலியுறுத்தியும் அனைத்து தொற்று நோய்களிலுருந்து நம்மை பாதுகாக்கவும் தமிழர் பாரம்பரியக் கலைகளைக் கற்பதன் அவசியத்தை வலியுத்தும் நோக்கில் சோழன் உலக சாதனை முயற்சியாக பள்ளி, கல்லூரி மாணாக்கர் பங்கேற்ற 14 மணி நேரம் இரட்டைச் சிலம்பம் சுற்றும் நிகழ்வு 21.3.2021 அன்று கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியை பெரியநாயக்கன்பாளையம் காவல்துறை துணைக்கண்காணிப்பாளர் கிருஷ்ணமூர்த்தி தொடக்கி வைத்து சிறப்புரையாற்றினார். கல்லூரியின் வணிகவியல் புல முதன்மையர் ஜெயக்குமார் வாழ்த்துரை வழங்கினார். முன்னதாக தமிழர் தற்காப்புக் காலை மன்றத்தின் ஒருங்கிணைப்பாளரும் தமிழ்த்துறை உதவிப்பேராசிரியருமான் முத்துக்குமார் வரவேற்புரையாற்றினார்.

சோழன் உலக சாதனை புத்தக நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் நிமலன் நீலமேகம் முன்னிலையில் 14 மணி நேரம் தமிழர் தற்காப்புக் கலை மன்ற மாணவர்கள் 70 பேர் இரட்டை சிலம்பம் சுற்றி முந்தைய 12 மணி நேர சாதனையை முறியடித்தனர்.

இந்நிகழ்வின் இறுதியில் சோழன் உலக சாதனையாளர் விருதும் பதக்கமும் சாதனை நிகழ்த்திய அனைவருக்கும் வழங்கப்பட்டது. விழாவின் நிறைவில் கணித்துடை உதவிப்பேராசிரியர் வெங்கடாசலம் நன்றியுரை வழங்கினார்.

கல்லூரியின் செயலர் மற்றும் இயக்குநர் டாக்டர் சி.ஏ. வாசுகி சாதனையாளர்களை வாழ்த்தினார். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை சிலம்பப் பயிற்சியாளர் வெண்பா. தொல்காப்பியன் செய்திருந்தார்.