கேபிஆர் கல்லூரியில் “கற்க கசடற” எனும் கருத்தரங்கம்

கேபிஆர் கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரியின் தமிழ்த்துறை வாயிலாக, “கற்க கசடற (அறுவகை வினா, எண்வகை விடை, ஆகுபெயர்)” என்ற தலைப்பில் கருத்தரங்கம் (4.5.2021) நடைபெற்றது. இந்நிகழ்விற்கு கல்லூரி முதல்வர் பாலுசாமி தலைமை உரை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் இரஞ்சன் கலந்துகொண்டு தொல்காப்பியர், நன்னூலார் வழிகொண்டு அன்றாட வழக்கு மொழியில் அறுவகை வினாக்களையும், எண்வகை விடைகளை குறித்தும் உற்ற உதாரணங்களுடன் விளக்கினார். மேலும் அ,இ,உ எனும் சுட்டெழுத்துக்களையும் ஆகுபெயரின் வகைகளையும் சரியான சான்றுகள் கூறி விளக்கினார்.

இந்நிகழ்வினை தமிழ்த்துறை இணைப் பேராசியர் முத்துக்குமார வடிவேல் வரவேற்புரை வழங்கினார். தமிழ்த்துறை உதவிப்பேராசியர் அம்பிகா இந்நிகழ்விற்கு சிறப்பு விருந்தினர் அறிமுகவுரையை வழங்கினார். தமிழ்த்துறை உதவிப்பேராசியர் தாரணி நன்றி உரை வழங்கினார்.

மேலும் இந்நிகழ்வின் ஒருங்கிணைப்பினை தமிழ்த்துறை உதவிப்பேராசியர் கோகுல்நாத் ஏற்பாடு செய்திருந்தார்கள். இக்கருத்தரங்கில் முதன்மையர்கள், பேராசியர்கள் மற்றும் மாணவர்கள் என 350க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.