நவீன காலத்தில் மனசோர்வுக்கு ஆளாகும் இளம் வயதினர்

பதின் பருவம் மற்றும் இளம் பருவத்தினர் பலர் இந்த அறிவியல் ரீதியில் வளர்ச்சி பெற்ற காலகட்டத்தில் குடும்பத்திலிருந்து விலகி இருப்பது, தேவையற்ற உறவுகள், நெடுநேர கைபேசி பயன்பாடு போன்றவற்றின் மூலம் இளம் பருவத்தினர் தங்களது வாழ்க்கை பாதையை மாற்றி கொள்கிறார்கள் என்பது பலரது எண்ணமாக இருக்கிறது.

ஆனால், இவர்கள் அதையும் தாண்டி மனசோர்வுக்கு ஆளாகிறார்கள் என்பது நிதர்சனமான உண்மையாகிறது. அதுமட்டுமல்லாமல் இந்த வயதினர் உடல் ரீதியிலான, மன ரீதியிலான மாற்றங்களை சந்திப்பதால் சில தடுமாற்றங்கள் நிகழும். இதனால் அவர்கள் மன ரீதியிலான சோர்வுக்கு ஆளாகிறார்கள். இது அண்மை காலத்தில் அதிகரித்து வருகிறது.

இதனை மற்றவர்கள் எளிதில் கண்டறிய முடியாது. காரணம் நீண்ட நேரம் உறங்குவது மற்றும் குடும்பத்துடன் நேரத்தை செலவிடுவதிலிருந்து விலகுவது என்பது இளம் பருவத்தினரின் இயல்பான நடவடிக்கை என்பதால் மனச்சோர்வைக் கண்டறிவது கடினம்.

அதுமட்டுமல்லாது ஒரு சில இளம் பருவத்தினருக்கு குடும்பத்தில் ஒரு பொறுப்பு வழங்கப்படுகிறது. அதனை ஏற்று நடந்து கொள்ள உதவும் பக்குவமும், வயதிற்குரிய உணர்வுகளும் இவர்களை பெரிதும் பாதிக்கிறது.

நாம் எதை பற்றி அதிகம் பேசுகிறோமோ அதை பற்றிய புரிதல் அதிகரிக்கும். அந்த வகையில் தங்களது பிரச்சனைகளை பற்றி குடும்பத்தினரிடமும் நண்பர்களிடமும் பேசுவதன் மூலமே அதிகப்படியானோரின் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைத்து விடும் என மனநல ஆலோசகர்கள் கூறுகின்றனர். இது எல்லாப் பிரச்சனைகளுக்கும் தீர்வு வழங்கக்கூடிதாக இருக்கும் என்பதும் உண்மை.

குடும்பத்தினரும் கிடைக்கும் வேளைகளில் அவர்களுக்கு அறிவுரை வழங்குவதை தவிர்த்து, அவர்களுடன் பயணிக்க ஆரம்பித்தால் அவர்கள் எதில் சிக்கியுள்ளார்கள் என்பது அவர்களுக்கே தெரியாமல் அதிலிருந்து மீட்டெடுக்க முடியும்.