தமிழர் பண்பாடு ஒரு விளக்கம் – இணையவழி கருத்தரங்கம்

கே.பி.ஆர்  கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரியின் தமிழ்த்துறை சார்பாக, ”தமிழர் பண்பாடு ஒரு விளக்கம்” எனும்  தலைப்பில் கருத்தரங்கம் (03/05/2021) நடைபெற்றது. அந்நிகழ்விற்கு கல்லூரி முதல்வர் பாலுசாமி  தலைமை உரை வழங்கினார்.

சிறப்பு விருந்தினராக, பேரூர் தவத்திரு சாந்தலிங்க அடிகளார் கலை அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறை இணைப்பேராசிரியர்  திருநாவுக்கரசு  கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

தமிழர் பண்பாடு குறித்தும் சங்க இலக்கியம், திருக்குறள், நாலடியார் என பண்டைய இலக்கியங்களில் இருந்து சான்றுகள் கூறி பண்பாடு நாகரிகம் பற்றிய வரலாற்றுத் தரவுகளை கூறினார்.

மேலும் பண்பாடு எனும் சொல்லிற்கும் CULTURE எனும் சொல்லிற்கும் உண்டான விளக்கத்தினையும் நவீனத்துவ சிந்தனையிலிருந்து விளக்கினார். நா.கந்தசாமி எழுதிய நூலில் தமிழர் பண்பாடு ஒருவிளக்கம் எனும் கட்டுரையின் போக்கினை  மாணவர்களுக்கு  விளக்கினார் .

இக்கருத்தரங்கில்  350 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.