சுஜாதா என்ற ரங்கராஜன்

ஏதோ ஒரு வகையில் நாம் அனைவரும் சுஜாதாவின் புத்தகங்களையோ அல்லது அவரது திரைப்பட வசனங்களையோ  கேட்காமல் இருந்திருக்க மாட்டோம். எழுத்துலகில் தனக்கென தனி முத்திரை பதித்து சென்றவர்.  தனது எழுத்தின் வாயிலாக பல சமூக அவலங்களையும், உணர்வுகளையும் எடுத்துரைத்துள்ளார். ரங்கராஜன் என்ற சுஜாதா நேபாலில் மே 3 அன்று 1935 இல் பிறந்தார். தனது இயற்பெயரை மாற்றி சுஜாதா என்று தனது மனைவியின் பெயரையே தன் புனைபெயராக மாற்றி கொண்டார். இன்று வரை சுஜாதா என்ற பெயரின் மூலமே இவரை நாம் அறிகிறோம்.

அவரது தனித்துவம் வாய்ந்த சுருக்கமான மொழி நடை, கதையின் சுவாரஸ்யத்தை அதிகரிக்கும் போக்கு, சுருக்கமாகவும், அதே சமயம் விளக்கமாகும் அமையும் கதை அம்சம், நடு நடுவே ஆங்கில வார்த்தைகள் என தமிழ் இலக்கியத்தில் புதியோதொரு எழுத்து பாணியை அறிமுகப்படுத்தியவர்.

இலக்கியம் மட்டுமல்லாது ஆன்மிகம், அரசியல், சினிமா, சமூகம், தொழிநுட்பம் என பல துறைகளில் அவருக்கு ஆழமான புரிதல் மற்றும் தொலை நோக்கு பார்வை இருந்தது. தமிழ் திரையுலகில் பல வெற்றிப்படங்களின் வசனங்கள்  இவருக்கு சொந்தமானதே.  ரோஜா, இந்தியன், முதல்வன், கன்னத்தில் முத்தமிட்டாள், கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன்  போன்ற பல திரைப்படங்களுக்கு வசனம் எழுதியுள்ளார். இவரின் வசனங்கள் எதார்த்தமாகவும், நகைச்சுவையுடன் இருப்பதோடு மட்டுமல்லாமல் வசனங்களின் இடையே இவர் கையாளும் பஞ்ச் வசனங்கள் தனித்துவம் வாய்ந்தது.