சர்க்கரைக்கு பதிலாக  தேனா….??  

சர்க்கரையும் தேனும் ஒரே இனிப்புச் சுவையைக் கொண்டிருந்தாலும் தேனில் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள், தாத்துக்கள், மற்றும் வைட்டமின்கள் நிறைந்து உள்ளது.சர்க்கரையில் நன்மை பயக்கும் ஊட்டச் சத்துக்கள் இல்லை.

நீரிழிவு,  எலும்பு பலவீனம் போன்ற உடலியல் பிரச்சனைகளுக்கு நாம் எடுத்துக் கொள்ளும் சர்க்கரை முக்கியக்  காரணமாக உள்ளது. கரும்பிலிருந்து கிடைக்கும் சர்க்கரையினால் பெரிதளவு தீங்கு ஏற்படவில்லை என்றாலும் நவீன வளர்ச்சியின் காரணமாக பலவேதிப் பொருட்களை கலந்து வெள்ளை நிறமாக மாற்றுகின்றனர் இதனால் உடலுக்கு தீங்கு ஏற்படும் .

“அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு” தேனையும் அதிக அளவில் எடுத்துக் கொள்வது ஆபத்தே. ஒரு நாளைக்கு இரண்டு டீஸ்பூன், 10 கிராம்அளவில் எடுத்துக் கொள்ளலாம்.

சர்க்கரைக்கு பதிலாக தேனை நாம் அருந்தும் பானங்களில் கலந்து குடிக்கலாம். ஆனால் அதிக சூடு உள்ளவற்றில் கலக்கும்போது நச்சுத்தன்மை கொண்டதாக மாறுகிறது.மேலும் தேனில் இருக்கும் இயற்கையான இனிப்பு உடல் எடையை குறைக்க உதவுகிறது. சளி, இருமல் போன்றவற்றிற்கு தேன் சிறந்த மருந்தாக பயன்படுகிறது.

சர்க்கரையைக் காட்டிலும் இயற்கையான தேன் ஆரோக்கியமானது மற்றும் அதிக ஆற்றலைக் கொண்டது.தேனில் உள்ள கால்சியம் எலும்புகளை வலுவுடையதாக்கிறது.மேலும் நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கிறது.

தேனை உட்கொள்வதினால் உடலில் சேரும் கொழுப்பின் அளவு கட்டுப்படுத்தப்படுகிறது. இதுசுவாசப் பிரச்சனையான மூச்சுத்திணறலை குணப்படுத்தி, மூச்சுக்குழாயில் ஏற்படும் அடைப்பை நீக்கி சுவாசத்தை எளிதாக்குக்கிறது.   ஜீரணப் பாதையில் உள்ள நுண் கிருமிகளையும், பாக்டீரியாக்களையும் அழிக்கும் ஆற்றல் தேனில் உள்ளது.