அரிமா சங்கத் தலைவர் தேர்வு

தமிழ்நாட்டில் உள்ள 13 அரிமா  மாவட்டங்களின் தலைவராக  கருணாநிதி போட்டியின்றி, இன்று (30.4.2021) தேர்ந்தெடுக்கப்பட்டார்

கொரோனா காலத்தில்  கோவை, திருப்பூர், நீலகிரி  உள்ளடக்கிய கோவை மண்டலத்தில் பொதுமக்கள், பொது மருத்துவமனைகளுக்கு கபசுர குடிநீர், முகக் கவசம்,  உடை, உணவு முதலியவற்றை  118 சங்கங்களின் துணைக்கொண்டு  மக்களுக்கு சேவை செய்தவர் இவர்.

மேலும்  அவரது சேவைகள் தொடர கோவை மாவட்ட  அரிமா சங்கம் மக்கள் தொடர்பு அலுவலர் செந்தில்குமார் மற்றும் முதல் துணை ஆளுநர் நடராஜன்,  இரண்டாம் துணை ஆளுநர் ஜெயசேகரன்,   நந்தகுமார்,  வெங்கடேஷ்,  ராஜகோபால் வாழ்த்தினார்கள்.