கொரோனா தடுப்பு பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல பகுதிகளில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் குமாரவேல் பாண்டியன் நேரில்  இன்று (30.4.2021)பார்வையிட்டு ஆய்வு

விளாங்குறிச்சி, இரத்தினகரி  ரோடு, ஏ.எம்.டி நகர், வருமானவரித் துறை ஊழியர்கள் குடியிருப்பு   செங்காளியப்பன் நகர் ஆகிய பகுதிகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள வீடுகளை பார்வையிட்ட அவர் தனிமைப் படுத்தப்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்ட காலம் முடியும் வரை வீட்டைவிட்டு வெளியே வர வேண்டாம் எனவும், தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் கிருமி நாசினி மருந்து தெளிக்கப்பட வேண்டும் என தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து, சேரன்மா நகரில் செயல்பட்டுவந்த தனியார் பேக்கரி மற்றும் சரவணம்பட்டி சாலையில் செயல்பட்டுவந்த தனியார்  பேக்கரிகளில் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்காமல் செயல்பட்டதற்காக இரு பேக்கரிகளையும் மூட மாநகராட்சி ஆணையாளார் உத்தரவிட்டார்.