“இ-வே பில்” பற்றிய விளக்கக்கூட்டம்

கோவை, இந்திய தொழில் வர்த்தகசபை சார்பில் “இ-வே பில்” எனப்படும் மின்னனு வழித்தட ரசீது நடைமுறை விளக்ககூட்டம் இன்று (24.1.2018) சுகுணா கல்யாண மண்டபத்தில் நடைபெற்றது.

இதில் ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி திட்டத்தில் மாநிலங்கள் இடையே 10கி.மீ தூரத்திற்கு மேல் எடுத்து செல்லப்படும் ரூ.50,000 மேல் மதிப்புள்ள சரக்கிற்கு வரும் பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் வரவிருக்கும் “இ-வே பில்” பற்றிய சந்தேகங்கள் குறித்த விளக்கங்கள் வழங்கப்பட்டன.

இக்கூட்டத்தில் இந்திய தொழில் வர்த்தகசபை தலைவர் வனிதா மோகன், கோவை மாவட்ட ஜிஎஸ்டி துறை (தமிழ்நாடு) இணை ஆணையர்கள், துணை ஆணையர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட இதர அலுவலர்கள் கலந்துகொண்டனர்.