கேபிஆர் கலை கல்லூரியில் “இலக்கணம் அறிவோம்” கருத்தரங்கம்

கேபிஆர் கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரியின் ஸ்கூல் அப் லிபரல் ஆர்ட்ஸ் தமிழ்த் துறையின் சார்பில் (19/04/2021) இணையவழியில் சிறப்புக் கருத்தரங்கம் நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு கல்லூரியின் முதல்வர் பாலுசாமி தலைமைதாங்கினார். சிறப்பு விருந்தினராக, கோவை எஸ்.என்.எஸ்.  ராஜலட்சுமி கலை அறிவியல் கல்லூரியின் தமிழ்த் துறை உதவிப் பேராசிரியர் அனுராதா கலந்து கொண்டு “இலக்கணம் அறிவோம்” எனும் தலைப்பில் சிறப்புரை வழங்கினார்.

காலத் தொன்மை வாய்ந்தத் தமிழ் மொழி இலக்கியம், இலக்கணம் எனும் சிறப்புமிக்க தன்மையுடன் விளங்குகின்றது. இத்தகையத் திறமுடைய மொழிக்கு மேலும் அணி சேர்ப்பதாக அமைவது இலக்கணம் என்பதை எடுத்துக் கூறினார். ஒன்றினைப் பற்றி அறிந்து கொள்ள ஒருவரை ஒருவர் வினாவுகின்றனர். அவ்வாறு வினாவும் வினா ஆறுவகைப்படும். அவை அறிவினா, அறியாவினா, ஐயவினா, கொளல்வினா, கொடைவினா, ஏவல்வினா ஆகும் என்பதை எடுத்துக்கூறி  வாழ்வோடு இணைத்து விளக்கம் கொடுத்தார். இதே போல் எண் வகை விடைகளுக்கு உண்டான இலக்கணத்தை மிகத் தெளிவாக எடுத்துக் கூறி ஆகுபெயரின் விளக்கமும் அதன் பயன்பாட்டு வகைகளையும் விளக்கி நிறைவு செய்தார்.

தமிழ்த் துறை உதவிப் பேராசிரியர் முத்துக்குமார வடிவேல் வரவேற்புரை வழங்கினார். தமிழ்த் துறை உதவிப் பேராசிரியர்கள் கோகுல்நாத் மற்றும் தாரணி ஆகியோர் ஒருங்கிணைத்து வழங்கிய நிகழ்வில் முதன்மையர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள்  370 நபர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.